2 பெண்களை ஏமாற்றிவிட்டு மூன்றாவது திருமணத்துக்கு தயாராகி வரும் சிங்கப்பூர் ஏ.எஸ்.பி!!

பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சிங்கப்பூர் ஏ.எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 பெண்களை ஏமாற்றிவிட்டு மூன்றாவது திருமணத்துக்கு தயாராகி வரும் சிங்கப்பூர் ஏ.எஸ்.பி!!
Published on
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த முகமது ரபிக் சிங்கப்பூர் காவல்துறையில் ஏ.எஸ்.பியாக பணியாற்றி வருகிறார். இவர் கூத்தாநல்லூரை அடுத்த அத்திக்கடை கிராமத்தை சேர்ந்த தஸ்லீமா பர்வீன் என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.

இதற்காக அவருக்கு 150 சவரன் தங்க நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த கைகடிகாரம் ஆகியவை சீர்வரிசையாக வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனிடையே மனைவியின் நடத்தையில் சந்தேகம் என கூறி முகமதுரபிக் அவரை விவாகரத்து செய்தார்.

இதன் பிறகு தூத்துக்குடியை சேர்ந்த அமர்நிஷா என்ற பெண்ணை 150 சவரன் நகைகள், விலை உயர்ந்த கை கடிகாரம் ஆகியவற்றை பெற்றுகொண்டு இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அவருடன் சிறுது காலம் வாழ்ந்த சிங்கப்பூர் போலீஸ் 2வது மனைவியையும் நடத்தை சரியில்லை என கூறி விவாகரத்து செய்தார். தற்போது அவர் 3வது திருமணம் செய்துகொள்ள தயாராகி வருவதாக தெரிகிறது... 

இதையடுத்து, முகமதுரபிக் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவாரூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com