திட்டக்குடி அருகே ஸ்கூட்டியில் இருந்த 6000 ரூபாய் பணம் திருட்டு..!

திட்டக்குடி அருகே ஸ்கூட்டியில் இருந்த 6000 ரூபாய் பணம் திருட்டு..!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கண்டமத்தான் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன். இவர் கண்ட மத்தான் கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

தீபாவளியை முன்னிட்டு மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க ராமநத்தம் வந்துள்ளார். ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலையின் அருகிலுள்ள ஏடிஎம்மில் இருந்து 60000 ரூபாயை எடுத்து தனது ஸ்கூட்டியின் டிக்கியில் வைத்து கொண்டு அப்பகுதியில் உள்ள மொத்த வியாபாரம் மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக அந்த  கடையின் முன்பு தனது ஸ்கூட்டை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அப்போது இரண்டு மர்மநபர்கள் பின் தொடர்ந்து வந்து பூட்டிய ஸ்கூட்டியில் டிக்கியில் இருந்த 60000 ரூபாயை திருடிச் சென்றுள்ளனர். அந்த திருடும் சிசிடிவி காட்சிகளை வைத்து ராமநத்தம் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.