ஆசிரியர் திட்டியதால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த கல்லூரி மாணவி!  

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆசிரியர் தரம் தாழ்த்தி பேசியதால், மன உடைந்த கல்லூரி மாணவி 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் தனியார் மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் அம்பத்தூர் அருகேயுள்ள புதூர் பகுதியை சேர்ந்த சோனாலி என்ற மாணவி முதலாம் ஆண்டு சுகாதார வியல் பயின்று வந்துள்ளார். இவர் தேர்வு அறையில் செல்போன் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்த ஆசிரியர் தரம் தாழ்த்தி பேசி, மாணவியை அறையை விட்டு வெளியேற்றியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.