சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. மாணவர் ஒருவர் கைது.. 7 பேருக்கு வலை வீச்சு!!

சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை..  மாணவர் ஒருவர் கைது.. 7 பேருக்கு வலை வீச்சு!!

இந்தியாவில் ஆங்காங்கே பாலியல் வன் கொடுமை சம்பவம் தொடர்ந்த்து நடந்து கொண்டு தான் வருகிறது. இதற்கு கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலும்.. இத்தகைய குற்றங்கள் குறைந்த பாடுஇல்லை.

பாலியல் வன்கொடுமை குறித்து கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தலித் மாணவி ஒருவர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன்னுடன் படித்த ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் 8 பேர் மீது வழக்கு செய்திருந்தனர். ஆனால், அவர்கள் மீது போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என  மாதர் சங்கம் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்ய போலீசார் தனி படை அமைத்தனர். இந்த தனிப்படை நேற்று இரவு மேற்கு வங்கம் சென்றது.

இந்நிலையில், மேற்கு வங்கம் சென்ற தனிப்படை போலீசார், ஐஐடி மாணவி பாலியல் வன்கொடைமை செய்யப்பட்டு வழக்கில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கிங்சோ தெப்சர்மாவை கொல்கத்தாவில் வைத்து இன்று கைது செய்தனர். கிங்சோ தெப்சர்மாவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. போக்குவரத்து வாரண்ட் கிடைத்ததும் கிங்சோ டெப்சர்மாவை போலீசார் சென்னைக்கு அழைத்து வர உள்ளனர். மேலும் 7 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.