திருடன் என நினைத்து ஆட்டோ ஓட்டுனரை அடித்தே கொன்ற கொடூரன்கள்...!! நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினர்

திருடன் என சந்தேகித்து ஆட்டோ ஓட்டுனரை அடித்து கொன்ற சம்பவம் மராட்டியத்தில் அரங்கேறியுள்ளது.
திருடன் என நினைத்து ஆட்டோ ஓட்டுனரை அடித்தே கொன்ற கொடூரன்கள்...!! நீதி கேட்டு  போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினர்
Published on
Updated on
1 min read

மராட்டியத்தின் தாமு நகரை சேர்ந்தவர் ஷாருக் ஷேக்.  ஆட்டோ ஓட்டுனரான இவர், கடந்த 13ந்தேதி மும்பை நகரின் சாம்த நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிக்கு வந்துள்ளார். அப்போது  வழிமறித்த ஒரு கும்பல் அவரை திருடன் என சந்தேகித்து கை, கால்களை கட்டி போட்டு, அடித்து, உதைத்து நிர்மல் சாவல் பகுதியருகே வீசி சென்றுள்ளது.

பின்னர் இந்த சம்பவம் பற்றி பொதுமக்கள் தகவல் கொடுத்ததன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்,  படுகாயங்களுடன் கிடந்த ஷாருக்கை  உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதனையடுத்து  வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இந்நிலையில், ஷாருக்கின் குடும்பத்தினர் கூடுதல் ஆணையாளர் அலுவலகத்திற்கு முன்பு  நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஷாருக் கொலையில் தொடர்புடைய கும்பலின் புகைப்படங்களை கொண்ட பேனர்களை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பியும் வந்தனர்.  இது குறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்  அவர்களை சமாதனமாக கலைந்து போக செய்தனர்.  இதனைத்தொடர்ந்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மராட்டியத்தில் திருடன் என்ற சந்தேகத்தில் ஆட்டோ ஓட்டுனர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com