மோட்டார் சைக்கிள் மோதி தனியார் பஸ் தீப்பிடித்து விபத்து!!!

தாம்பரத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார் சைக்கிள் மோதி தனியார் பஸ் தீப்பிடித்து விபத்து!!!

சென்னை அடுத்த தாம்பரம் பஸ் நிலையம் அருகே, ஜிஎஸ்டி சாலை ஓரம், தனியார் நிறுவனங்களுக்கு ஊழியர்களை ஏற்றி செல்லும் பேருந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று அதிகாலை, குரோம்பேட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி, படு வேகமாக இரு சக்கர வாகனத்தில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்திற்கு மேல் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், ஓரமாக நின்று கொண்டிருந்த பேருந்தின் பின்பகுதியில், அந்த இருசக்கர வாகனம் மோதியது.  ஏற்கனவே வேகமாக வந்த வண்டி, கட்டுப்பாட்டை இழந்ததால், மேலும் வேகமாக நிறுத்த ம்டுஇயாத நிலைஇல் பேருந்தில் மோதி, இரு சக்கர வாகனம் தீப்பிடித்தது. இதனைத் தொடர்ந்து அந்த நிறுத்தப்பட்டிருந்த பேருந்தும் எரிய தொடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இரு சக்கர வாகனத்தை ஓடிய வாலிபர், தீப் பரவ தொடஙியதும் அங்கிருந்த் தப்பி ஓடிய நிலையில்,  அந்த இரு சக்கர வாகனமும், தனியார் பேருந்தும் கொழுந்து விட்டு எரிந்தது.

தகவல் அறிந்த தாம்பரம் தீயணைப்பு படையினர் மற்றும் தாம்பரம்  போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் பஸ் முழுவதுமாக எரிந்து சேதமானது. இந்த விபத்து குறித்து தாம்பரம் போலீசார் விசாரணை  நடத்தி வருகிறார்கள்.