13 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு ... போக்சோவில் கைதான அரசுப்பள்ளி ஆசிரியர்...

பரமக்குடி அருகே பெருமாள்கோவில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை கைது செய்து மற்றும் ஒரு ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.

13 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு ... போக்சோவில் கைதான அரசுப்பள்ளி ஆசிரியர்...

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பெருமாள்கோவில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 197 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாவட்ட குழந்தைகள் நல மையம் சார்பாக பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அப்போது பாலியல் தொந்தரவு குறித்து 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என கூறப்பட்டது. 

இதனையடுத்து இப்பள்ளியில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு இலவச என்னை தொடர்பு கொண்டு கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜ் ஆகியோர் தங்களை அடிக்கடி தொட்டு பேசுவதும், இரட்டை அர்த்தத்திலும் பேசி பேசுகின்றனர்.

வீட்டிற்கு சென்ற பிறகு போனில் தொடர்பு கொண்டு பாலியல் தொந்தரவு செய்கின்றனர் என புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசந்தகுமார். பெருமாள்கோவில் அரசு பள்ளியில் விசாரணை செய்து தொடர்ந்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆசிரியர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் சமூக அறிவியல் ஆசிரியர்  விருதுநகரை சேர்ந்த ராமராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தலைமறைவாக உள்ள மற்றொரு ஆசிரியர் ஆல்பர்ட் வளவனை போலீசார் தேடி தேடி வருகின்றனர். ஒரே பள்ளியில் பயிலும் 13 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர்கள் இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.