பட்டப்பகலில் பெண்ணை தாக்கிய வாலிபர்கள்... சமூக வலைதளங்களில் பரவும் சி.சி.டிவி காட்சிகள்...

பட்டப்பகலில் ஒரு பெண்ணை வாலிபர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பட்டப்பகலில் பெண்ணை தாக்கிய வாலிபர்கள்... சமூக வலைதளங்களில் பரவும் சி.சி.டிவி காட்சிகள்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள குச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெயமணி மனைவி சங்கீதா இவரது கணவர் சென்னையில் கடந்த 15 வருடமாக லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்யும் தொழில் நடத்தி வந்தார். ஜெயமணியுடன் இவரது உறவினர் குச்சிக்காடு கிராமத்தை சேர்ந்த வினோத்,விஜயகுமார் வேலை செய்து வந்தனர்.

சங்கீதாவின் கணவர் ஜெயமணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் ஜெயமணியின் பணத்தினை அவரது உறவினர்கள் வினோத்,விஜயகுமார் ஏமாற்றி விட்டதாக முன்விரோதம் இருந்துவந்தது. இந்நிலையில்   மூரார்பாளையம் கரூர் வைஸ்யா வங்கியில் பணம் எடுப்பதற்க்க சென்றபோது  சங்கீதாவை வினோத் விஜயகுமார் மற்றும் உறவினர்கள் சம்பத், சரமாரியாக தாக்கினர் மேற்கண்ட எதிரிகள் பின்தொடர்ந்து வந்து அசிங்கமாக பேசி, அடித்து, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து சங்கராபுரம் போலீசில் சங்கீதாவின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் வினோத்,விஜயகுமார், சம்பத் உள்பட 3 பேரையும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து தலைமறைவாக உள்ளமூன்று எதிரிகளையும் சங்கராபுரம் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பட்டப்பகலில் ஒரு பெண்ணை 3 வாலிபர்கள் சுற்றிவளைத்து தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.