போக்சோ வழக்கில் கோயில் அர்ச்சகர் கைது...!

மதுரை மாவட்டத்தில் பாலியல் குற்ற வழக்கில் கோவில் அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தல்லாகுளம் பகுதியில் உள்ள பூங்காமுருகன் கோவிலில் தூத்துக்குடியை சேர்ந்த கண்ணன் அர்ச்சகராக உள்ளார். இக்கோவிலுக்கு வந்து செல்லும் மாநகர் பகுதியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவனிடம்  தான் கணக்கியல் பாடத்தில் சிறப்பாக பயிற்சிப் பெற்றவர் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து, இரவு தனது வீட்டில் வைத்து டியூசன் நடத்துவதாகக் கூறி அழைத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதையும் படிக்க : கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் உயிரிழப்பு... அமெரிக்காவில் பயங்கரம்! 

இதனையறிந்த பெற்றோர்கள் காவல்துறையிடம் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் அர்ச்சகர் கண்ணனை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.