செட்டிநாடு குழுமங்களில் காலை முதல் தொடரும் சோதனை.....!!!

செட்டிநாடு குழுமங்களில் காலை முதல் தொடரும் சோதனை.....!!!

செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.

செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமாக சிமெண்ட் நிறுவனம், நிலக்கரி நிறுவனம், சர்வதேச ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம், பள்ளிகள் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.  இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அண்ணா சாலை மற்றும் எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் இயங்கி வருகிறது.  இந்த இரண்டு அலுவலகங்களிலும் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகியது.

மேலும் சென்னை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.  அதைப் போலவே தமிழ்நாட்டில் சென்னை, கரூர், கோவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.  இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் சோதனையில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது.  வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2020ஆம் ஆண்டு மற்றும் 2015ஆம் ஆண்டு செட்டி நாடு குரூப்ஸ் தொடர்பான இடங்களில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டு, பல கோடி மதிப்பிலான பணம் மற்றும் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com