பிறந்து சில மணி நேரமே ஆன பெண்குழந்தை கழிவறை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை கொடூரம்...

தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண்குழந்தை கழிவறை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
பிறந்து சில மணி நேரமே ஆன பெண்குழந்தை கழிவறை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை  கொடூரம்...
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள கழிவறையை சுத்தம் செய்வதற்கு தூய்மை பணியாளர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது கழிவறை தண்ணீர் தொட்டியில் தொப்புள் கொடியுடன் பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கியபடி இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் அளித்தார்.

தொடர்ந்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து விரைந்து வந்த அவர்கள் சிசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கழிவறை பகுதிக்குள் யார் யார் சென்றார்கள் என்று, அங்குள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com