சிவசங்கர் பாபாவை 3வது போக்சோ வழக்கிலும் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரம்...

சிவசங்கர் பாபாவை 3வது போக்சோ வழக்கிலும் கைதுசெய்யத் தேவையான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

சிவசங்கர் பாபாவை 3வது போக்சோ வழக்கிலும் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி  போலீசார் தீவிரம்...
சுசில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் அடையாறு அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த நடன ஆசிரியை சுஸ்மிதா என்பவரையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே சிவசங்கர் பாபா, இரண்டு போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மூன்றாவது போக்சோ வழக்கிலும் அவரைக் கைது செய்வதற்கு தேவையான ஆவணங்களை, சி.பி.சி.ஐ.டி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். நாளை நீதிமன்றம் விடுமுறை என்பதால் வரும் வியாழக்கிழமை சிவசங்கர் பாபா-வை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 3-வது போக்சோ வழக்கிலும் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 
அதேபோல சிவசங்கர் பாபா-விற்கு உடந்தையாக இருந்த ஆசிரியைகள் 5 பேருக்கு, நேற்று விசாரணைக்கு ஆஜராக சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், அவர்கள் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் அவர்களுக்கு சம்மன் அனுப்ப சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதிலும் அவர்கள் ஆஜராகாவிட்டால், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் சிபிசிஐடி காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.