பணம் திருடியவனை தட்டிக்கேட்ட நபரை குத்திக்கொலை செய்த கொடூரம்...

தருமபுரி அருகே பாஸ்ட் புட் கடையின் கல்லாப்பெட்டியில், பணம் திருடியவரை தட்டிக்கேட்ட நபர், கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
பணம் திருடியவனை தட்டிக்கேட்ட நபரை குத்திக்கொலை செய்த கொடூரம்...
Published on
Updated on
1 min read

தருமபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த மல்லாபுரத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி அண்ணாதுரை. இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் ஓர் ஆண்டுக்கு முன்பு மல்லாபுரத்தில் உள்ள பாஸ்ட் புட் கடையில் பணிபுரிந்த நிலையில் தற்போது தர்மபுரியில் உள்ள  ஹலோபிரிக்ஸ் கம்பெனியில் பணி செய்து வந்தார். இந்நிலையில் திடீரென அண்ணாதுரை தான் ஏற்கனவே உணவகத்தில் உணவு சாப்பிட சென்றுள்ளார். அப்போது அங்கு உணவு சாப்பிட வந்த குமார் மற்றும் அவரது நண்பரும் சேர்ந்து கல்லாப்பெட்டியிலிருந்து பணத்தை திருட முயன்றுள்ளனர்.

இதனை கண்ட அண்ணாதுரை தட்டிகேட்ட நிலையில் மூவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அண்ணாதுரையை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அண்ணாதுரையை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து குமார் மற்றும் அவரது நண்பரையும் கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com