துணிப்பையில் சுற்றப்பட்டு கிடந்த பச்சிளம் பெண் குழந்தை  

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை துணிப்பையில் சுற்றப்பட்டு கிடந்த  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கறம்பக்குடி அருகே பிலாவிடுதி பேருந்து நிறுத்ததில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை ஒன்று, துணிப்பையில் சுற்றப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் கண்டெடுத்த நிலையில், குழந்தை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் குழந்தையின் பெற்றோர் யார் என தேடி வருகின்றனர்.