பட்டம் விட்டு விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் குளத்தில் மூழ்கி பலி!! விளையாட்டு வினையானது

குளத்தில் விழுந்த பட்டத்தை எடுக்க முயன்ற சிறுவன்  நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்டம் விட்டு விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் குளத்தில் மூழ்கி பலி!! விளையாட்டு வினையானது

மத்திய பிரதேசத்தில்  சத்கேடா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாபீர் ஹூசைன். 13 வயது சிறுவனான  ஷாபீர் ஹூசைன் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது பட்டம் காணாமல் போனதால் பட்டத்தில் இருந்த நூலைப் பின்தொடர்ந்து சென்றுள்ளான். மேலும் நூலைப் பின் தொடர்ந்த சிறுவனுக்கு பட்டம் குளத்தில் விழுந்தது தெரியவந்தது. 

இதையடுத்து குளத்தில் விழுந்த பட்டத்தை எடுக்க முயன்றபோது சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக  உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமைனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.