திருநங்கைகள் வைத்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாலிபர் கொடூரமாக அடித்துக்கொலை!!

விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாலிபரை திருநங்கைகள் சேர்ந்து அடித்துக்கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது.

திருநங்கைகள் வைத்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாலிபர் கொடூரமாக அடித்துக்கொலை!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சென்னப்பட்டணா அருகே லாலாஹட்டி கிராமத்தில்   5 திருநங்கைகள் சேர்ந்து ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்றுமுன் தினம் 5 திருநங்கைகள் சேர்ந்து தங்களது வீட்டில் விருந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மண்டியா மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் என்ற வாலிபர் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது ஆனந்த்துக்கும், திருநங்கைகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அந்த பிரச்சனையில் ஆத்திரமடைந்த  திருநங்கைகள் 5 பேரும் ஆனந்த்தை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பின்னர் இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 திருநங்கைகளையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.