வற்புறுத்தி திருமணம் செய்து வைத்ததால் 2 ஆம் நாளே மனைவியை எரித்து கொன்ற கணவன்! ...கூலிப்படையை ஏவி பழிதீர்க்க நினைத்த பெண்வீட்டார்...!

வற்புறுத்தி திருமணம் செய்து வைத்ததால்  2 ஆம் நாளே மனைவியை எரித்து கொன்ற கணவன்!   ...கூலிப்படையை ஏவி பழிதீர்க்க  நினைத்த பெண்வீட்டார்...!

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தை சேர்ந்த ஜோதிமணி என்பவரும் சோளவந்தானை அடுத்த ராயபுரத்தை சேர்ந்த கிளாடிஸ்ராணி என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்ததாகவும், அதனால்  கிளாடிஸ்ராணி கர்ப்பமாகி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் சில நாட்களாகவே காதலன் ஜோதிமணி, காதலியிடம் சரியாக பேசாமலும் அவரை திருமணம் செய்ய மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் கிளாடிஸ்ராணியில் கர்ப்பம் குறித்து வீட்டில் உள்ள பெற்றோருக்கு தெரியவரவே, அவர்கள் தங்கள் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஜோதிமணியை மிரட்டியுள்ளனர்.

இதனால் வேறுவழியின்றி காதலித்த பெண்ணான கிளாடிஸ்ராணியை ஜோதிமணி திருமணம் செய்து கொண்டார். பின்னர் திருமணமான 2-வது நாளே கிளாடிஸ்ராணி எரித்து கொல்லப்பட்ட நிலையில் முட்புதரில் சடலமாக கிடந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

கணவருக்கு விருப்பமின்றி கட்டாய திருமணம் செய்து வைத்ததாக சொல்லபடும்நிலையில், அவர் மேல் சந்தேகமடைந்த போலீசார், ஜோதிமணியை விசாரித்தனர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. தன்னுடைய விருப்பம் இல்லாமல் தனக்கு கிளாடிஸ்ராணியை கட்டாய திருமணம் செய்து வைத்த விரத்தில் தான் மனைவியை கொன்றதாக வாக்குமூலம் அளித்தார்.

அதனைதொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் நீதிமன்றம் ஜோதிமணியின் ஜாமின் மனுவை விசாரித்து அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்க உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி தினமும் சோழவந்தான் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்

அதுபோன் இன்று கையேழுத்திட காவல்நிலையம் வந்த அவரை,.இருசக்கர வாகனத்தில் வந்த மர்மகும்பல் அரிவாளால் துரத்தியுள்ளனர். மர்மகும்பலின் பிடியில் இருந்து உயிர்பிழைத்தால் மட்டும் போதும் என்று ஓடிய ஜோதிமணி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் மர்மகும்பல் தன்னை துரத்தி வருவதாக கூறியுள்ளார்.

போலீசாரும் மர்மகும்பலை பிடிக்க சென்றனர். ஆனால் அதற்குள் அவர்கள் தப்பிசென்று விட்டதாக கூறப்படுகிறது. மேலும் தன்னை துரத்தி வந்த கும்பல், தன் மனைவியின் வீட்டார்கள் மூலம் அனுப்பட்ட கூலிப்படை கும்பலாக தான் இருக்கும் என போலீசார் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபர்பபை ஏற்படுத்தியுள்ளது.