குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது...

குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து பெற்ற மகளை பல முறை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை மற்றும் உடந்தையாக இருந்த அவனது இரண்டாவது மனவியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

குளிர்பானத்தில் மதுவை  கலந்து கொடுத்து பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது...

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் மன அழுத்ததுடன் அமர்ந்து இருந்த 14 வயது சிறுமியை பார்த்த காவல்துறையினர் அந்த சிறுமியிடம் விசாரித்தனர். அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் இருந்த நிலையில் மெரினா காவல்துறையினர் புதுவண்ணாரப்பேட்டையில் இருக்கக்கூடிய காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

காப்பகத்தில்  சிறுமிக்கு உணவு கொடுத்தபோது சாப்பிடாமல் சோகத்துடன் காணப்பட்டார். இதனால் காப்பகத்தில் இருந்தவர்கள் அந்த சிறுமியிடம் விசாரித்தனர். அப்போழுது செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கத்தை சேர்ந்த குமாா் (வயது 40) இவருடைய மனைவி உயிரிழந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டாவது மனைவி கஸ்தூரி என்பவருடன் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.கடந்த ஒரு மாத காலமாக தந்தை குமாா், இரண்டாவது மனைவி உதவியுடன் சிறுமியை பாலியல் வன்புணா்வுக்கு ஆளாக்கபட்டதாக அந்த சிறுமி வேதனையுடன் கூறியுள்ளார்.

 இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரிடம் தகவல் தெரிவிக்கபட்டு திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் விரைந்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சிறுமிக்கு அவரது தந்தை குமாா் குளிா்பானத்தில் மதுவை ஊற்றி கொடுத்து பலமுறை உடலுறவு கொண்டு துன்புறுத்தியது தெரியவந்தது. இதனை யாருக்கும் தெரிவிக்காமல் மறைத்த அவரது சித்தி கஸ்தூாி இருவா் மீதும் போக்கோ உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.