பூட்டை உடைத்து கொள்ளையடித்த திருடனின் காலை உடைத்த பொதுமக்கள்...

திருப்பத்தூர் அருகே  ஐந்து சவரன் தங்க நகை மற்றும் 1.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்தவனின் பிடித்து அடித்து காலை உடைத்த பொதுமக்கள்.

பூட்டை உடைத்து கொள்ளையடித்த திருடனின் காலை உடைத்த பொதுமக்கள்...

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு பகுதியை சார்ந்த புல்லார்கவுண்டர் மகன் வெங்கடேசன். இவர் கோயம்புத்தூரில் பானிபூரி கடை நடத்தி வருகிறார்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ரமேஷ் மற்றும் இவருடைய நண்பர்கள் இரண்டுபேர் சேர்ந்து வெங்கடேசன் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து, முன்பக்க கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் தங்க நகை மட்டும் ஒன்றரை லட்சம் பணத்தை திருடியுள்ளனர்.

அதன்பிறகு, பக்கத்து வீட்டில் இருக்கும் ஸ்ரீரங்கம் என்பவரின் வீட்டிற்கும் வந்து கதவை உடைத்து உள்ளே செல்ல முற்பட்டுள்ளனர். அதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடி ரமேஷை பிடித்து அடித்து காலை உடைத்துள்ளனர். ரமேஷுடன் வந்த 2 மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

பின்னர் இச்சம்பவம் அறிந்து வந்த குரிசிலாப்பட்டு போலீசார் பொது மக்களிடம் கொள்ளையனை மீட்டு திருப்பத்தூர்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யாருமில்லாத வீட்டின் பூட்டை உடைத்து திருடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.