வயதான மாமியாரை அடித்துக் கொன்ற கொடூர மருமகள்.. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம்!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பட்டப்பகலில் மாமியாரை அடித்து கொன்றுவிட்டு மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வயதான மாமியாரை அடித்துக் கொன்ற கொடூர மருமகள்..  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம்!!
Published on
Updated on
1 min read

எடப்பாடி அடுத்த குரும்பபட்டி கிராமம் தானமூர்த்தியூரில் வசித்து வந்த மூதாட்டி தைலம்மாளுக்கு, மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

அனைவருக்கும் திருமணமான நிலையில் கணவனை இழந்த தைலம்மாள் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது மூன்றாவது மகன் மெய்வேலில் மனைவி செல்விக்கும், தைலம்மாவுக்கும் இடையே தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மருமகள் செல்வி, மாமியார் தைலம்மாளை  கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு, அவரது வீட்டிலேயே சேலையில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அப்போது வீடு திரும்பிய மெய்வேல், ரத்த வெள்ளத்தில் கிடந்த தைலம்மாளை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது தைலம்மாள் உயிரிழந்துவிட்டதாக  மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மெய்வேலின் மனைவி செல்வியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கொங்கணாபுரம் காவல் துறையினருக்கு கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து வந்த போலீசார் 2 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, மாமியாரை கொலை செய்து விட்டு மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com