ஆண் நண்பர்களுடன் சேர்ந்து தாயை கொலை செய்த மகள்.. இந்த காரணத்திற்காகவா? தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு

தூத்துக்குடியில் ஆண்களுடன் பழகுவதை கண்டித்த தாயை, காதலனின் நண்பர்களுடன் சேர்ந்து மகளே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண் நண்பர்களுடன் சேர்ந்து தாயை கொலை செய்த மகள்.. இந்த காரணத்திற்காகவா? தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி வண்ணார் 2வது தெருவை சேர்ந்தவர் முனியலட்சுமி. கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், கடந்த ஒரு வருடமாக தனது பிள்ளைகளுடன் தனித்து வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவருடைய 17 வயது மகளுக்கு ஆண் நபர்கள் பழக்கம் அதிகளவில் இருந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஒருவரை காதலித்து வந்ததாகவும் தெரிகிறது. இதனிடையே ஆண்களுடனான பழக்கத்தை தவிர்க்குமாறு மகளை முனியலட்சுமி கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மகள், தனது காதலன் மற்றும் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து முனியலட்சுமியை கழுத்தை நெறித்தும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து, யாரோ கொலை செய்து விட்டதாக நாடகமாடிய மகள், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கினார். இந்நிலையில், தப்பியோடிய ஆண் நண்பர்கள் குறித்து அந்த சிறுமியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com