கொரோனாவுக்கு பயந்து குடும்பத்தையே கொன்ற டாக்டர்... கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த அதிர்ச்சி...

உத்திரபிரதேசத்தில் தனது குடும்பத்தினரை கொடூரமாக கொலைசெய்த மருத்துவர் பிணமாக மீட்கப்பட்ட அதிர வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கொரோனாவுக்கு பயந்து குடும்பத்தையே கொன்ற டாக்டர்... கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த அதிர்ச்சி...
Published on
Updated on
1 min read

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் தடயவியல் பேராசிரியராக பணியாற்றி வருபவர் டாக்டர் சுசில் சிங். இவருடைய மனைவி சந்திரபிரபா. இவருக்கு சிகார் சிங்க் என்ற மகனும் குஷி சிங் என்ற மகளும் உள்ளனர். இதற்கிடையில் கடந்த 3-ம் தேதி சுஷில் சிங் தனது மனைவிக்கு டீயில் மயக்க மருந்து கொடுத்து மயங்கிய பின்னர் சுத்தியலால் தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். மேலும் தன் மகன் மற்றும் மகள் இருவரையும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இது தொடர்பாக சுசில் சிங் தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் தான் குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மன அழுத்தத்தில் உள்ளதாகவும் எழுதியிருந்தார். மேலும கொரோனா யாரையும் விட்டு வைக்காது. எனவே குடும்பத்தினரை ஆபத்தில் விட்டு செல்ல எனக்கு மனம் இல்லை எனவே அவர்களை விடுவித்து விட்டு செல்கிறேன் என எழுதி இருந்தார்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் தனது வீட்டை விட்டு வெளியேறிய சுசில் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுசீலை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கான்பூர் மாவட்டம் சித்நாத் ஹட் பகுதியில் சுஷில் சிங் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து அது சுசில் தான் என்பதை உறுதி செய்தனர். சுசிலின் ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com