ஷேர் ஆட்டோ ஓட்டுனர் மர்ம மரணம்... நாமக்கல்லில் போலீசார் விசாரணை...

நாமக்கல்லில் ஷேர் ஆட்டோ ஓட்டுனர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
ஷேர் ஆட்டோ ஓட்டுனர் மர்ம மரணம்... நாமக்கல்லில் போலீசார் விசாரணை...
Published on
Updated on
1 min read

நாமக்கல் மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரண்ராஜ் (32),  ஷேர் ஆட்டோ ஒட்டி வருந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் மர்மமான முறையில் சரண்ராஜ் உயிரிழந்து கிடந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அருகில் வசிப்பவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த சரண்ராஜின் கண் மற்றும் முகம் பகுதியில் காயம் இருந்ததால் அவரை யாரேனும் அடித்து கொலை செய்து விட்டார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டன. உயிரிழந்த சரண்ராஜ் கடன் பிரச்சினையில் சிக்கியுள்ளதாகவும், இதனால் மனைவியிடம் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இருப்பினும் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com