தீப்பிடித்த ஆட்டோவில் கருகிய நிலையில் இருந்த ஓட்டுநர்!

Published on
Updated on
1 min read

சங்கரன் கோவில் அருகே மலையடிக் குறிச்சியில் தீப்பற்றி எரிந்த நிலையில் இருந்த ஆட்டோவில் உடல் முற்றிலும் எரிந்து கருகிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே மலையடிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைத்துரை. இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு முதல் இவரை காணவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, உறவினர்கள் இவரை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை மலையடிக்குறிச்சி ஊருக்கு புறமாக உள்ள உள்ள கீழ சிந்தாமணி பெரிய குளத்தில் வெள்ளத்துரையின் ஆட்டோ தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த நிலையில் நின்றுள்ளது.

அவ்வழியாக சென்றவர்கள் அருகே சென்று பார்த்தபோது ஆட்டோவில் உடல் கருகிய நிலையில் வெள்ளத்துரை சடலமாக கிடப்பதை கண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புளியங்குடி காவல் துறையினர், வெள்ளைத்துரையின் சடலத்தை மீட்டு கருகிய நிலையில் இருந்த வெள்ளைத்துரையின் சடலத்தை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் சம்பவ இடத்திற்கு தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் வெள்ளத்துரை தனது மரணத்திற்கு காரணம் குறித்து வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் தனது மரணத்திற்கு சொக்கம்பட்டியில் உள்ள தனது தங்கையின் கணவர் மற்றும் அவரது மகன் தான்  காரணம் என கூறிவிட்டு அதை வலதளங்களில் பரவ விட்டு உள்ளார். இந்த சம்பவம் தற்போது சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com