தம்பியின் திருமணத்தன்று அண்ணனை கொலை செய்த தந்தை? கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகம்!!

தேனி அருகே இளையமகனின் திருமணத்தன்று மூத்த தகனை கொலை செய்து தற்கொலை என நாடகமாடிய தந்தையை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.
தம்பியின் திருமணத்தன்று அண்ணனை கொலை செய்த தந்தை? கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகம்!!
Published on
Updated on
1 min read

தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் இளைய மகன் அரவிந்தனுக்கு  உறவுக்காரப் பெண்ணுடன்  திருமண நடைபெற இருந்தது. இந்நிலையில் அனைவரும் கல்யாணம் மண்டபம் புறப்படும்போது மூத்த மகன் மூவேந்தரன் தனது தம்பி கல்யாணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை அய்யாச்சாமியுடன சண்டை போட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் அனைவரும் திருமண வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்க்கும் போது மூவேந்திரன் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதே நேரத்தில் மூவேந்தரனை, அவரது தந்தை கம்பியால் அடித்து கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடுவதாக சின்னனூர் காவல்துறையினருக்கு ரகசிய தொலைபேசி மூலம் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அய்யாச்சாமியை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com