
திருவள்ளூர் அடுத்த காக்களூர் மாருதி நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (21). இவர் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருவதுடன் அதன் பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் அரவிந்தன் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய 10 ஆம் வகுப்பு மாணவியை செல்போனில் ஆபாச படம் எடுத்து அதை காட்டி மிரட்டியுள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து மாணவியின் தாயார் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மாணவி ஆன்லைன் வகுப்பு கற்க வாங்கிய செல்போனில் அரவிந்தன் ஆபாசப் படங்களை எடுத்து காண்பித்து மிரட்டியதாக தெரிவித்ததன் பேரில், அரவிந்தனை போக்சோ சட்டத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.