மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்...!

நெல்லை மாவட்டம் உவரி பேருந்து நிறுத்தம் அருகில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன், தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி..!
மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்...!
Published on
Updated on
1 min read

சிவகாசி பகுதியை சேர்ந்தவர் அந்தோணி பிச்சை. அவரது மனைவி ஜெயலட்சுமி. இருவரும் உவரி அந்தோணியார் கோவிலுக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் உவரி அந்திரேயா ஆலயம் எதிர்புறம் உள்ள  பேரறிஞர் அண்ணா பேருந்து பயணிகள் நிழற்கூடத்தில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக, கணவர் அந்தோணி பிச்சை மனைவியின் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து உவரி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்தோணி பிச்சை உவரி போலீசாரிடம் செய்கையில் பேப்பர் மற்றும் பேனாவை கேட்டு வாங்கி அதில் தன்னை பற்றிய குறிப்பை அவரே எழுதிக் கொடுத்துள்ளார். பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.   இது குறித்து வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ் குமார் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரே மனைவியைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் உவரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com