பனியாரம் நல்லா இல்ல என சொன்ன மனைவியை போட்டு தள்ளிய கணவன்.. பதபதவைக்கும் சம்பவம்!!

பனியாரம் நல்லா இல்ல என கூறிய மனைவியை அடித்து கொலை செய்த கணவன்...
பனியாரம் நல்லா இல்ல என சொன்ன மனைவியை போட்டு தள்ளிய கணவன்.. பதபதவைக்கும் சம்பவம்!!
Published on
Updated on
2 min read

சேலம் மாவட்டம் கடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி என்ற ஒரு பகுதி உள்ளது. இங்கு வசித்து வருபவர் லட்சுமணன்.. 30 வயதாகும் இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவரின் மனைவி பெயர் சரண்யா (வயது 26). 2 பிள்ளைகள் உள்ளன. லட்சுமணனுக்கு குடி பழக்கம் இருந்துள்ளது. இவர் குடித்து விட்டால், வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம்.. சில நேரங்களில் கண்மூடித்தனமாக அடித்து விடுவாராம்... சம்பவத்தன்றும் தண்ணி அடித்து விட்டு போதையில் வீட்டிற்கு வந்த லட்சுமணன் வழக்கம் போல் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், சிறிது நேரத்தில், ஈரோட்டில் உள்ள சரண்யாவின் தம்பியான நந்தகுமாருக்கு லட்சுமணன் போன் செய்துள்ளார்.  போனில், உன் அக்கா திடீரென இறந்து விட்டால் என கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ந்து போன தம்பி உடனே தனது பெற்றோர்களுடன் அக்கா வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு சரண்யாவின் சடலம் தான் கிடந்துள்ளது. இதை பார்த்த குடும்பத்தினர் கதறி கதறி அழுதனர்.

அப்போது, சரண்யாவின் முகம் வீங்கியிருந்தது.. கை,கால் என உடம்பெல்லாம் இரத்த காயங்கள் இருந்ததை கண்ட நந்தகுமார் உடனடியாக, தீவட்டிப்பட்டி போலீசுக்கு சென்றுள்ளார். தன்னுடைய அக்காவின் மரணத்தில் மர்மம் உள்ளது. லட்சுமணன் தான் தனது அக்காவை அடித்து கொன்று விட்டார். விசாரணை நடத்தி கண்டு பிடியுங்கள் என கேட்டு கொண்டார். பின்னர்  லட்சுமணனை விசாரணை செய்ததில், அவர் கூறிய வாக்குமூலம் போலீசாரையே அதிரவைத்தது. 

குடுத்திட்டு வீட்டுக்கு வந்த லட்சுமணன் மனைவி, குழந்தைகளுக்காக கடையில் பனியாரம் வாங்கிட்டு வந்துள்ளார். அதை சரண்யா சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு விட்டு இந்த பனியாரம் ருசியாகவே இல்லை.. இதை எதற்கு இவ்வளவு காசு கொடுத்து வாங்க வேண்டும் என கேட்டுள்ளார். பனியாரம் ருசியாக இல்லை என சொன்னதற்கு சரண்யாவிடம் லட்சுமணன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தான் சரண்யாவை அடித்து, கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். உடம்பெல்லாம் ரத்தக்காயங்களுடன் சரண்யா இறந்து கிடப்பதை கண்டவுடன் தான் லட்சுமணனுக்கு சுயநினைவு வந்துள்ளது. இதற்கு பிறகு தான் சரண்யாவின் தம்பிக்கு போன் செய்துள்ளார். தற்போது லட்சுமணனை போலீசார் கைதி செய்துள்ளனர்.... ஒரு பனியாரத்திற்காக உயிரை பறிப்பது எவ்வளவு பெரிய கொடுமை...!!!

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com