சென்னையில் புகாரை வாபஸ் பெற அழைத்து தாக்கிய சம்பவம்...!!

சென்னையில் புகாரை வாபஸ் பெற அழைத்து தாக்கிய சம்பவம்...!!

தன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம் வா என்று கூறி அடித்து கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சார்ந்தவர் தருண் குமார்.  அவரது வயது 26.  இவர் எம்.சி ரோட்டில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.  இவரிடம் வெள்ளை நாகராஜ் என்பவர் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறி கடந்த மாதம் 19 ஆம் தேதி B1 வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் தருண் குமாருக்கு வெள்ளை நாகராஜ் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு வழக்கை வாபஸ் பெறுவது சம்பந்தமாக நேரில் பேசிக் கொள்ளலாம் வா என்று அழைத்துள்ளார்.  இதனை தொடர்ந்து தருண்குமாரும் N4 பீச் அருகே எஸ். என் செட்டி  சாலைக்கு சென்றுள்ளார்.  அப்பொழுது வெள்ளை நாகராஜ் மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் திடீரென வந்து தருண்குமாரை அடித்து கத்தியால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். பின்னர் தருண்குமார் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் தொடர்பாக புது வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இதனைத் தொடர்ந்து  வெள்ள நாகராஜன் கூட்டாளியான ஜெகன் வயது 22, சாய்ராம் வயது 24 ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.  மேலும் தலைமறைவாகியுள்ள வெள்ளை நாகராஜையும் தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க:     தாம்பரம் சண்முகம் சாலையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்... காரணம் என்ன?!!