மனைவியைக் கொன்ற கொலைக் கைதி தப்பியோட்டம்... தர்மபுரியில் போலீசார் தேடுதல் வேட்டை...

தர்மபுரியில் மனைவியை கொலை செய்த கொலைக் குற்றவாளி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியைக் கொன்ற கொலைக் கைதி தப்பியோட்டம்... தர்மபுரியில் போலீசார் தேடுதல் வேட்டை...

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை உளி மங்கலம் பகுதியைச் சேர்ந்த ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாத் மகன் கார்த்திக் என்கின்ற விஜி வயது 33. கூலித்தொழிலாளி.

தனது மனைவியை கொலை செய்த வழக்கில் தர்மபுரி மாவட்ட சிறையில் அடைக்கபட்டிருந்தார்.இன்று அவரை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இளைய மூர்த்தி தலைமை காவலர்கள் அசோகன், ராஜசேகர் ஆகியோர்  அழைத்து சென்றனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு காரில் தர்மபுரி  சிறையில் அடைக்க வந்தனர்.

அப்போது  தர்மபுரி மாவட்ட கிளை சிறைச்சாலையின் முன்பு  இரவு 7 மணி அளவில் காரில் வந்து இறங்கும் போது, போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு  கை விலங்கு டன் விஜி தப்பி ஓடினார். இதனையடுத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இளைய மூர்த்தி அதியமான் கோட்டை  போலீசில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் சிறைச்சாலை வளாகம்,சிறை சாலை முன்பு, கிருஷ்ணகிரி-சேலம் பைபாஸ், ராயக்கோட்டை பைபாஸ், தடங்கம் பிரிட்ஜ், சோகத்தூர் நான்கு ரோடு, தர்மபுரி டவுன் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தற்போது தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.