சூடு பிடிக்கும் குழந்தைகள் விற்பனை விவகாரம்!!

Published on
Updated on
1 min read

திருச்செங்கோடு குழந்தைகள் விற்பனை விவகாரம் இதுவரை 7 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் தினேஷ், நாகஜோதி தம்பதி. இவர்களுடைய  பெண் குழந்தையை மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வரும் அனுராதா, கரூர் வெங்கமேடு பகுதியைச்சேர்ந்த யோகாம்பாள் என்பவர் மூலம் இரண்டு லட்சம் ரூபாய் தருவதாக பேரம் பேசி குழந்தையை விற்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தினேஷ், நாகஜோதி அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில்,  குமாரபாளையத்தைச் சேர்ந்த மற்றொரு இடைத்தரகர் பாலாமணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லிமலையில் குழந்தைகள் விற்பனையில் ஈடுபட்ட அதே கும்பல் மீண்டும் குழந்தைகள் விற்பனையில் ஈடுப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் இதுவரை 7 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், ஒவ்வொரு குழந்தையும் 3 முதல் 5 லட்சத்திற்கு விற்றது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அரசு மருத்துவர் அனுராதா ஒரு குழந்தையை விற்பனை செய்ய உதவி  3 லட்சம் ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com