34 வயது இளைஞருடன் உல்லாசமாக இருந்த மாமியார்... கள்ளக்காதலனை ஸ்கெட்ச் போட்டு சம்பவம் செய்த மருமகன்!!

சென்னை அருகே மாமியாருடனான கள்ளகாததை கைவிட மறுத்த ஆட்டோ ஓட்டுநரை, மருமகன் தனது நண்பருடன் சேர்ந்து சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

34 வயது இளைஞருடன் உல்லாசமாக இருந்த மாமியார்...  கள்ளக்காதலனை ஸ்கெட்ச் போட்டு சம்பவம் செய்த மருமகன்!!

சென்னை புளியந்தோப்பு அடுத்த கே.எம். கார்டன் 13- வது தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். 40 வயதான இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன் தினம் அதிகாலையில் கே.எம். காலணி தெருவில் ஆட்டோ ஓட்டி சென்றதாக சொல்லப்படுகிறது.

அப்போது அவரின் ஆட்டோவை வழிமறித்த, 2 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் கையில் வைத்திருந்த ஆயுதத்தால் மணிவண்ணனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மணிவண்ணனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவரது நிலமை மிகவும் மோசமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனிடையே நடந்த சம்பவம் குறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டனர்.

விசாரணையில் புளியந்தோப்பு சூளை தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனது நண்பரான சரத் சந்திரனுடன் சேர்ந்து மணிவண்ணனை சரமாரியாக வெட்டியது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்து போலீசார் விசாரித்தனர். அதில் பலதிடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

கைது செய்யப்பட்ட பிரகாஷின் மாமியாருக்கு ஆட்டோ ஓட்டுநர் மணிவண்ணனுக்கு கள்ளதொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த பிரகாஷ் பலமுறை  இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் இருவரும் கேட்கவில்லை போல தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், தன்னுடைய நண்பருடன் சேர்ந்து மணிவண்ணை வெட்டியதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.