கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருக்க இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்த தாய்..!

நாகையில் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்த கொடூர தாயை, கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்துள்ளனர். 

கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருக்க இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்த தாய்..!

நாகையில் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்த கொடூர தாயை, கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்துள்ளனர். 

நாகை மாவட்டம் மேலவாஞ்சூரைச் சேர்ந்தவர் கார்த்திக் அரவிந்த். இவருக்கும் நாகையை சேர்ந்த அபர்ணா என்பவருக்கும் திருமணமாகி 4 வயதில் கவித்ரன் என்ற ஆண்குழந்தை இருந்தது. இந்நிலையில் கனவன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கார்த்திக் சென்னையில் தனியாக வசித்து வருகிறார். இதனிடையே தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனருக்கும் அபர்ணாவிற்கும் கள்ளக்காதல் வளர்ந்த நிலையில் இருவரும் குழந்தையுடன் தனியாக வீடெடுத்து தங்கி வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன் தினம் குழந்தை இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளதாகவும், குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கார்த்திக் போலீசாருக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சமபவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் குழந்தையின் தாய் அபர்ணா கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதற்கு குழந்தை இடையூறாக இருந்ததாகவும் அதனால் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அபரணா சுரேஷ்யை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.