மெரினா கடற்கரையில் கிடந்த ஆண் சடலம்!! கொலையா..? தற்கொலையா...?

மெரினாவில் கிடந்த அரசு ஊழியர் உடல் கொலையாக? இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மெரினா கடற்கரையில் கிடந்த ஆண் சடலம்!! கொலையா..? தற்கொலையா...?
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடற்கரைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரை, நொச்சி நகர் பகுதியில் உள்ள கடல் மணல் பரப்பில் நேற்று அதிகாலை ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அங்குள்ள மீனவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மயிலாப்பூர் போலீசார், கடற்மணல் பரப்பில் கிடந்த ஆணின் சடலத்தை  மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் மெரினா கடற்கரையில் சடலமாக கிடந்தவரின் பெயர் ஜெகதீஷ் என்பதும், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு தேர்வுகள் துறை இயக்குனரகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ஜெகதீஷ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com