குப்பைகளை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்த நபரை கத்தியால் குத்திக்கொலை செய்த மர்மகும்பல்...

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே குப்பைகளை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்த நபரை மர்மநபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குப்பைகளை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்த நபரை கத்தியால் குத்திக்கொலை செய்த மர்மகும்பல்...

திருப்பத்தூர் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சங்கர்.   இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள விளங்காமுடி அடுத்த நொறுக்குபாறை பகுதியில் சந்தியா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சாதனா என்ற மகள் உள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு மனைவி சந்தியா இறந்துவிட்டநிலையில், அவரது மகள் சாதனா விளங்காமுடியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி அரசு பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மனைவி இறந்த துக்கம் தாளாமல் இருந்த கணவர் சங்கர் சரியாக வேளைக்கு செல்லாமல் பல கிராமங்களுக்கு சென்று சாலையில் சிதறி இருக்கும் காகிதம் மற்றும் மது பாட்டிகளை எடுத்து விற்று பிழைப்பு நடத்தி வந்தார்.

இந்தநிலையில் போச்சபள்ளி அருகே உள்ள அரசம்பட்டி இருந்து பாரூர் செல்லும் சாலையில் உள்ள பழனம்பாடி என்ற இடத்தில் இருந்த நிழல் கூடத்தில் அருகே படுத்திருந்த சங்கரை, மர்மநபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இது தொடர்பாக பாரூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது, தகவலின்பேரில் வந்த போலீசார், இறந்து கிடந்த சங்கரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பின்னை கொலை சம்பவம் நடந்த இடத்தில் பொருத்திவைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்துவருகிறனர். மேலும்  இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், சங்கரை கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.