சித்தப்பாவை கழுத்தை நெறித்துக்கொன்ற அண்ணன் மகன்... தூக்கு மாட்டிக் கொண்டது போல் ஜோடித்த அவலம்!!

மயிலாடுதுறை அருகே சித்தப்பாவை கழுத்தை நெறித்துக் கொன்று விட்டு தூக்கு மாட்டிக் கொண்டது போல் ஜோடித்த அண்ணன் மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
சித்தப்பாவை கழுத்தை நெறித்துக்கொன்ற அண்ணன் மகன்... தூக்கு மாட்டிக் கொண்டது போல் ஜோடித்த அவலம்!!
Published on
Updated on
1 min read

மயிலாடுதுறை மாவட்டம் கேசவன்பாளையத்தை சேர்ந்த நாகராஜ் என்பவர்  டீக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 19-ம் தேதி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவரது உறவினர்கள் தற்கொலை என நினைத்து போலீசாருக்கு தகவல் அளிக்காமல் 20-ம் தேதி மாலை அடக்கம் செய்துவிட்டனர். இந்நிலையில், இன்று நாகராஜின் அண்ணன் மகன் பாலசிகாமணி மதுபோதையில் தனது சித்தப்பாவை கொன்றது நான்தான் என அப்பகுதியினரிடம் உளறியுள்ளார்.

மேலும் போதையில் இருந்த தனது சித்தப்பா நாகராஜ் தன்னை திட்டியதால் ஆத்திரமடைந்து கழுத்தை நெரித்து கொன்றதாகவும், அதன்பின்னர் துண்டால் கழுத்தில் சுற்றி ஜன்னலில் கட்டி விட்டதாகவும், அப்போது தானும் குடிபோதையில் இருந்ததாகவும் பாலசிகாமணி கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து, அங்கு வந்த போலீசார், புதைக்கப்பட்ட நாகராஜின் உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்து பின்னர் மீண்டும் புதைத்தனர். தொடர்ந்து பாலசிகாமணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com