மகனிடம் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த நபர் : நண்பருடன் சேர்ந்து கொலை செய்த தந்தை !!

மகனிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்தவரை தனது கூட்டாளியுடன் சேர்ந்து குத்திக் கொன்ற தந்தைகூட்டாளியுடன் கைது.
மகனிடம் குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த நபர் : நண்பருடன் சேர்ந்து கொலை செய்த தந்தை !!
Published on
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கீழ ஊரணி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளராக உள்ளார். இவர் தேவகோட்டையில் மாட்டுக்கறி விற்பனை கடை வைத்துள்ளார்- இந்த கடையை அவரது மகன் நிஷாந்த் கவனித்து வந்துள்ளார். நிஷாந்த் தேவகோட்டை கடைக்கு சென்று வரும் பொழுது காரைக்குடி அருகே உள்ள ரஸ்தா சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் அடிக்கடி மது அருந்த பணம் கேட்டு மிரட்டி வாங்கி வந்துள்ளார்.

இதுகுறித்து தனது தந்தை கணேசனிடம் நிஷாந்த் கூறியதைத் தொடர்ந்து நேற்று காலை கணேசன் அவரது நண்பர், சுந்தரமாணிக்கம் இருவரும் ராஜ்குமாரை தேடி பல முறை அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன்பின்பு நேற்று பிற்பகல் 3 மணி அளவில் தேவகோட்டை ரஸ்தா நெடுஞ்சாலையில் ராஜ்குமாரை சந்தித்த கணேசன், அவரது நண்பர் சுந்தர மாணிக்கம் இருவரும் ஏன் எனது மகனை மிரட்டி அடிக்கடி பணம் கேட்டு வாங்குகிறார் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம்  முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். அதன் பின்பு கணேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜ்குமாரை வயிற்றில் குத்தியதில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். கணேசன் மற்றும் சுந்தரம்மாணிக்கம் இருவரையும் சோமநாதபுரம் காவல்துறையினர் கைது செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com