மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன்...! தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்...!

மாமனாரை அடித்துக் கொன்ற மருமகனுக்கு தீர்ப்பு வழங்கிய விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம்

மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன்...! தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்...!

விருதுநகர் அருகே குல்லூர் சந்தை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் நந்தகோபால்(42). அவரது மனைவி  ரோஸ்மேரி. குடும்பத்தகராறு காரணமாக ரோஸ்மேரி, அவரது தந்தை நாகராஜன் வீட்டிற்கு நந்தகோபாலை பிரிந்து சென்றுள்ளார். 

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரிந்து சென்ற மனைவியை திரும்ப அழைத்து வர நந்த கோபால் அதே பகுதியில் உள்ள அவரது மாமனார் நாகராஜனின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் நந்தகோபாலின் மனைவி ரோஸ்மேரியை திரும்ப அனுப்ப  மாமனார் நாகராஜன் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நந்த கோபால், நாகராஜனை அடித்து அவரை சுவற்றில் முட்ட வைத்துள்ளார். இதனால் படுகாயமடைந்த நாகராஜன் மதுரை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இது குறித்து விருதுநகர் சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தகோபாலை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஹேமந்தகுமார், நந்தகோபாலுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.