காதலிக்க மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி... மாணவன் செய்த அட்டூழியம்...

மேற்கு வங்க மாநிலம் அலிபுர்துார் மாவட்டத்தில் உள்ள ஃபலகட்டா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் முகமது என்ற மாணவர், தனது காதலை ஏற்க மறுத்த பெண்ணை பிளேடால் கொடூரமாக கிழித்துள்ளார்.

காதலிக்க மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி... மாணவன் செய்த அட்டூழியம்...

கடந்த வாரம் பெண் கல்லூரி வாயிலை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, முகமது பெண்ணின் தலைமுடியைப் பிடித்து தாக்கியதுடன், தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான பிளேடால் அறுத்துள்ளார். இதில் பெண்ணி முகம், மார்பு மற்றும் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயம் ஏற்பட்டது.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனை கூற்று படி, பெண்ணின் நெற்றி, முகம், மார்பு மற்றும் முதுகில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 35 தையல்களுக்கு மேல் போட வேண்டியிருந்தது என தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில்; முகமது என்னை கடந்த 1 வருடத்திற்கும் மேலாக காதலிக்க சொல்லி வற்புறுத்தினான். நான் அவருடைய காதலை ஏற்க மறுத்ததால் இந்த கொலைவெறி தாக்குதலுக்கு தான் உள்ளாகியுள்ளதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தப்பி ஓடிய முகமதுவைதேடி வருகின்றனர்.