சென்னை மூலக்கொத்தளம் பகுதியை சேர்ந்த சுகந்தி, ராஜாஜி சாலையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு உதவி செய்வது போல் நடித்த வடமாநில இளைஞர் ஒருவர், அவரது ஏஎடிஎம் கார்டை வாங்கியுள்ளார். அவரின் ரகசிய எண்ணை பெற்றுக் கொண்ட இளைஞர், ஏடிஎம் மில் பணம் வரவில்லை எனக் கூறியதுடன், அவருடைய ஏடிஎம் கார்டுக்கு பதிலாக வேறொரு கார்டை மாற்றி வழங்கியுள்ளார்.