கழுத்தை நெறித்த கந்துவட்டி! தூக்கிட்டு உயிரிழந்த வியாபாரி!!  

சென்னை அம்பத்தூரில் கந்து வட்டி கொடுமையால் வியாபாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கழுத்தை நெறித்த கந்துவட்டி! தூக்கிட்டு உயிரிழந்த வியாபாரி!!   

சென்னை அம்பத்தூரில் கந்து வட்டி கொடுமையால் வியாபாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் செல்வகுமார். மளிகை கடை நடத்தி வந்த இவர், வியாபாரத்தை பெருக்குவதற்காக  கொரட்டூர், எல்லையம்மன் நகரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம் 4 லட்சம் ரூபாயும் கொரட்டூர் தில்லை நகரைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரிடம் 11லட்சம் ரூபாயும்  கடனாக வாங்கியுள்ளார். இதற்கிடையில், கொரோனா ஊரடங்கால் வருவாயின்றி தவித்து வந்த செல்வகுமாரை, கடனை திரும்ப கேட்டு தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செல்வகுமார், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கடன் கொடுத்த பிரகாஷ், தியாகராஜன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.