தம்பியை பழிதீர்க்க வந்த கும்பலிடம் சிக்கி அண்ணன் பலியான சோகம்...

காஞ்சிபுரத்தில், தம்பியை கொன்று பழிதீர்க்க முயன்ற கும்பலிடம்,    அண்ணன் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தம்பியை பழிதீர்க்க வந்த கும்பலிடம் சிக்கி அண்ணன் பலியான சோகம்...

காஞ்சிபுரம், பல்லவர்மேடு பகுதியை சேர்ந்தவர் செந்தில். ஆட்டோ ஓட்டுநரான இவரது தம்பி ரகு மீது 2  கொலை வழக்குகள் உள்ளன. கடந்த 2013-ஆம் ஆண்டு பிரபல ரவுடி பிரபாகர் என்பவரின் அண்ணனை வெட்டி படுகொலை செய்ததால் பழிக்கு  பழியாக ரகுவின் அண்ணன் சரவணன் எதிர்தரப்பால் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் செந்திலின் தந்தை நடராஜன் அவர்களின் 13ம் நாள் காரியம் தொடர்பாக நள்ளிரவு வீட்டு வாசலில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடி பேசி கொண்டிருந்தனர். அப்போது மர்ம கும்பல் ஒன்று செந்தில்  வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியது. அத்துடன் அக்கும்பல் ரகுவை குறிவைத்து தாக்க துவங்கிய போது சுவர் ஏறி குதித்து தப்பித்து ஓடிவிட்டதாக தெரிகிறது.

ஆனால் அவரது மற்றொரு அண்ணன்  செந்தில்குமார் மர்ம கும்பலிடம் மாட்டி கொண்டார். கஞ்சா போதையுடன் வெறித்தனமாக விரட்டிய மர்ம கும்பல் செந்திலை சுற்றி வளைத்து சுமார் 12 இடங்களில் சரமாரியாக வெட்டி சாய்த்தது. மேலும் ஆவேசம் தனியாத அக்கும்பல் அங்கிருந்த பாறாங்கல் மற்றும் உருட்டு கட்டையால் செந்திலை சாகும் வரை துடிதுடிக்க அடித்து கொன்றது. இது குறித்து  போலீசார் வழக்கு  பதிவு செய்ததுடன் கொலை கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைத்து  விசாரணை நடத்தி  வருகின்றனர்.