சிறுநீரைக் குடிக்க வைத்த பாஜக தலைவர் செய்த அசிங்கம் அம்பலமானது!!!

பாஜக தலைவர் சீமா பத்ராவின் வீட்டில் ஒரு பணிப்பெண்ணை பல ஆண்டுகளாக அடைத்து வைத்து கொடுமை படுத்தி இருக்கிறார். மீட்கப்பட்ட பெண்ணின் நிலை, அனைவரது மனதையும் பதை பதைக்க வைக்கிறது.

சிறுநீரைக் குடிக்க வைத்த பாஜக தலைவர் செய்த அசிங்கம் அம்பலமானது!!!

10 வருடங்களுக்கு முன்பு, பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் சுனிதா என்பவர், ஜார்கண்டின் பாஜக தலைவர் சீமா பத்ரா என்பவரது வீட்டில் பணிப்பெண்னாக இணைந்திருக்கிறார். 19 வயதில் ஒன்றும் தெரியாத பெண்ணாக, அவரது வீட்டில் நுழைந்த சுனிதா என்பவரை சுமார் 8 ஆண்டுகளாக, வீட்டில் அடைத்து வைத்து, கொடுமை செய்திருக்கிறார். 19 வயதான சுனிதா, தனது 10 வருட வாழ்க்கையை இந்த கொடுமைகளுக்கு பலி கொடுத்திருக்கிறார்.

இது குறித்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் பலரால் வெளியிடத் துவங்கியதை அடுத்து, சீமாவை கட்சியில் இருந்து வெளியேற்றினர். அதுமட்டுமின்றி பாஜகவின் பெண்கள் பிரிவில் முக்கிய பொறுப்பு வகித்து வந்த பத்ரா மற்றும் அவரது கணவரான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மகேஷ்வர் பத்ரா ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் கூறுகின்றன.

மீட்கப்பட்ட பெண்ணின் முகத்தில் பல வகையான பெரிய காயங்களும், பல பற்கள் காணாமலும், முழுவதுமாக பாதிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அது மட்டுமின்றி, சூடான தவாவால் அடித்து, உண்ன உணவு தண்ணீர் கூட கொடுக்காமல் சிறுநீரைக் குடிக்க வைத்து கொடுமை படுத்தியதாகவும் கூறப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இது குறித்து சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி மற்றும் தெலங்கனா ராஷ்டிரியா சமிதி (TRS) ஆகியோர், தங்களது கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதனை வெளியிட்ட, கிருஷ்ணன் என்பவர், “பாஜக தேசிய செயற்குழு தலைவர் சீமா பத்ரா பழங்குடியின பெண்ணை 8 ஆண்டுகளாக சித்ரவதை செய்தது இப்படித்தான்...” என கருத்து பதிவிட்டுள்ளார்.