தவறான பாதையில் அதிவேகமாக சென்ற வேன்...! ஒருவர் பலி...! ஓட்டுனர் கைது..!

தவறான பாதையில் அதிவேகமாக சென்ற வேன்...! ஒருவர் பலி...! ஓட்டுனர் கைது..!
Published on
Updated on
1 min read

சென்னை கொளத்தூர் 200 அடி சாலை ராஜமங்கலம் சிக்னல் அருகே கடந்த 12 ஆம் தேதி இரவு சாலையை கடக்க முயன்ற கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ஞானசெல்வி (48) என்ற பெண் மீது அவ்வழியாக ஒருவழிப்பாதையில் அதிவேகமாக ஓட்டி வரப்பட்ட வேன் மோதி விபத்து எற்பட்டது.

அந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஞான செல்வி பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். 

இந்நிலையில், பெண்ணின் மகன் நவீன் அளித்த புகாரின் பேரில் வேன் ஓட்டுனரான கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த விஷால் அய்யனார் (22) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய வேனையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com