கணவனை கொன்று பீஸ் பீஸாக வெட்டி செப்டிக் டாங்கில் புதைத்த மனைவி...வேடிக்கை பார்த்த மகன்...

கணவனை தன் நண்பர்களுடன் இணைந்து தலை தனியாக உடல் தனியாக வெட்டி செப்டிக் டாங்கில் புதைத்த மனைவியை போலீசார் கைது சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
கணவனை கொன்று பீஸ் பீஸாக வெட்டி செப்டிக் டாங்கில் புதைத்த மனைவி...வேடிக்கை பார்த்த மகன்...
Published on
Updated on
1 min read

மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூரை சேரந்தவர் பப்லு ஜடோ - சுனிதா தம்பதி. இவருக்கு பிரசாந்த் ஜடோன் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த வியாழக்கிழமையன்று இரவு நல்ல குடிபோதையில் இருந்தபோது, அவரது நண்பருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதோடுமட்டுமில்லாமல், மிரட்டுவதாக நினைத்து தன் தந்தையை கொலை செய்ததே என் தாய் தான் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது என உலறியுள்ளார். இதனையடுத்து  அவரது நண்பர் இந்த தகவலை போலீசாருக்கு தெரிவித்துள்ளார்.

அதன்படி பிரசாந்த் ஜடோனின் தாயான சுனிதாவை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், டிரைவராக பணியாற்றும் என் கணவர் பப்லு ஜடோ அவ்வப்போது தன்னை துன்புறுத்தி வந்ததாலும், தனக்கு துரோகம் செய்ததாலும் ஆத்திரத்தில் எனது நண்பர்களான ரிஸ்வான் கான் மற்றும் பாய்யு ஆகியோரின் உதவியோடு கொன்றதாக ஒப்புக்கொண்டார். கணவனை கொன்றது நான் தான் என்று ஒப்புக்கொள்கிறேன், ஆனால்  அவரை கொலை செய்ததற்கு ஒரு துளி கூட வருத்தம் தெரிவிக்கமாட்டேன்  என்றார்.

இதுகுறித்து தகவல் தெரிவித்த போலீசார், பிப்ரவரி 5 ஆம் தேதி பப்லுவின் உணவில் சுனிதா விஷம் கலந்து கொடுத்துள்ளார். பின்னர் அவர் சுயநினைவை இழந்தபோது, சுனிதாவும் ரிஸ்வானும் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். அதன்பிறகு  இந்தூரில் இறைச்சி கடை வைத்திருக்கும் ரிஸ்வானும், பையுவும் பப்லுவின் உடலை கடையில் வைத்து ஐந்து துண்டுகளாக வெட்டியுள்ளனர்.  இதனை பார்த்த சுனிதாவின் மகன், எதிர்ப்பு தெரிவிப்பதற்கு பதிலாக, தன் தாய்க்கு துணையாக இருந்துள்ளார். 

மேலும் ரிஸ்வானும் பையுவும் இணைந்து நறுக்கப்பட்ட பப்லு உடலின் கால்களையும் கைகளையும் தேவாஸ் காட்டில் வீசியுள்ளனர். இதனையடுத்து பப்லுவின் தலை மற்றும் உடலை பிப்ரவரி 6 ஆம் தேதி சுனிதா தனது வீட்டில் கட்டிய செப்டிக் டேங்கில் புதைத்ததாக காவல்துறை அதிகாரிகள் தரப்பில்  கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சுனிதா மற்றும் அவரது மகன் பிரசாந்த் இருவரையும் கைது செய்ததோடு, அவர்களுக்கு உதவி செய்துவிட்டு தப்பி ஓடிய ரிஸ்வான் மற்றும் பையுவை போலீசார் தேடி வருகின்றனர்.
 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com