சதுரங்க வேட்டை பாணியில் 98 லட்சத்து 23 ஆயிரம் மோசடி செய்த பெண்....!!

சதுரங்க வேட்டை பாணியில் 98 லட்சத்து 23 ஆயிரம் மோசடி செய்த பெண்....!!

மண்ணுளி பாம்பு மருந்து செய்ய பயன்படுகிறது எனவும் அதிக எடை இருந்தா அதிக விலையும் அதிக லாபமும் கிடைக்கும் எனவும் கூறி சதுரங்க வேட்டை படத்தில் ஏமாற்றுவதை பார்த்திருக்கலாம்.  அதை போலவே மூளை கேன்சரை குணமாக்கும் மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் இந்தியாவில் இமயமலையில் கிடைப்பதாகவும் அதனை ஆப்ரிக்கா நாடுகளில் அதிக விலை கொடுத்து வாங்குவதாக திருப்பூரை சேர்ந்த நபருக்கு குறுந்தகவல் மூலம் தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக அவர் அந்த தகவல் அனுப்பிய நபர்களிடம் விசாரித்ததில் அதிக லாபம் கிடைக்கும் எனவும் நம்பி உள்ளார். 

மேலும் உகாண்டாவை சேர்ந்த பெண் மற்றும் நைஜீரியாவை சேர்ந்த இளைஞர் இருவரிடமும் பேசிய போது தங்களுக்கு கிருஷ்ணா எண்டர்பிரைசஸில் இருந்து மூலப்பொருட்கள் வாங்கப்படுவதாகவும், இமயமலையில் இருந்து இந்த மூலப்பொருள் கிடைப்பதால் எளிதாக கிடைக்காது.  எனவே அங்கு இருந்தால் உடனடியாக வாங்கி வைத்து விட வேண்டும் எனவும் அதனை தங்களுக்கு வாங்கி அனுப்பியவர் இறந்து விட்டார்.  எனவே , கிருஷ்ணா என்டர்பிரைசஸ் இமெயில் ஐடி தருவதாகும் அவர்களை தொடர்பு கொண்டு மூல பொருட்களை வாங்கி வைத்து விட்டு தங்களுக்கு தகவல் தெரிவித்தால் இந்தியா வந்து அதிக விலைக்கு தாங்களே எடுத்துச் செல்வதாகவும் அதற்கான கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார்கள். 

இதனை நம்பிய திருப்பூரை சேர்ந்த நபர் குறிப்பிட்ட போலி நிறுவனத்தை தொடர்பு கொண்டு 98 லட்சத்தி 28 ஆயிரம் ரூபாய்க்கு மூலப்பொருள் மூலிகை என பொய்யான பொருட்களை வாங்கி உள்ளார்.  ஆனால் அது வரை தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பில் கிடைக்காமல் போக்கு காட்டி உள்ளனர்.  சில நாட்களில் வாங்கிய பொருள் வீணான போது தான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.  இது தொடர்பாக, திருப்பூர் மாநகர சைபர் போலீசில் பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வங்கி கணக்குகளை ஆய்வு செய்து 5 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் பணத்தை முடக்கம் செய்தனர்.  

மேலும் குற்ற செயலில் ஈடுபட்டவர்களை விரைந்து பிடிக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் உத்தரவிட்டார். இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த 19ஆம் தேதி திருப்பூர் மாநகர சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் உமேஷ் என்ற குற்றவாளியை மும்பையில் வைத்து கைது செய்து திருப்பூர் அழைத்து வந்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com