பேரனைக் கொன்று, பேத்தியை தாக்கி தப்பிச் சென்ற பெண்... கோவையில் பரபரப்பு சம்பவம்...

கோவையில் 3 மாத ஆண் குழுந்தையை கொன்று விட்டு, 3 மாத பெண் குழந்தையை கொடூரமாக தாக்கி விட்டு தப்பிச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். 
பேரனைக் கொன்று, பேத்தியை தாக்கி தப்பிச் சென்ற பெண்... கோவையில் பரபரப்பு சம்பவம்...
Published on
Updated on
1 min read

கோவை கவுண்டம்பாளையம் சேரன் நகரை சேர்நதவர் பாஸ்கரன் (இன்ஜினியர்), இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்களுக்கு மூன்று மாத இரட்டைக் குழந்தை (ஆண், பெண்)  உள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பதற்காக, மதுரையில் இருந்து ஐஸ்வர்யாவின் தாயார்  சாவித்திரி பாஸ்கரன் வீட்டிற்கு வந்து கடந்த 2 மாதமாக தங்கியிருந்து கவனித்து வந்துள்ளார். 

இந்நிலையில் குழந்தைகளை தாயார் சாவித்திரியிடம் விட்டுவிட்டு, ஐஸ்வர்யா கடைக்குச் சென்றிருந்தார். அந்த நேரத்தில் சாவித்திரி  பேரனை கொலை செய்துவிட்டு,  பெண் குழந்தையை கொடூரமாக தாக்கி காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார். பேரனை கொன்று விட்டு, பேத்தியை தாக்கிவிட்டு தப்பிய சாவித்திரியை போலீசார் தேடி வருகின்றனர். சொந்த பேரனை பாட்டியே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com