தீ பொறி திருமுகமாக மாறிய பெண்.. கணவனை குடும்பத்தோடு எரித்த கொடூரம்.. காரணம் கேட்டா அதிர்ந்து போயிடுவீங்க!!

கணவன் 2 வது திருமணம் செய்ததால், ஆத்திரம் அடைந்த மனைவி மொத்த குடும்பத்தையும் எரித்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீ பொறி திருமுகமாக மாறிய பெண்..  கணவனை குடும்பத்தோடு எரித்த கொடூரம்.. காரணம் கேட்டா அதிர்ந்து போயிடுவீங்க!!

பீகார் மாநிலத்தில் கணவன் 2 வது திருமணம் செய்ததால், ஆத்திரம் அடைந்த மனைவி.. கணவன், 2வது மனைவி மற்றும் அவரின் குடும்பத்தை தீவை வைத்து எரித்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கணவனுக்காக மதுரையை எரித்த பெண் கண்ணகி என்ற கதையை அனைவரும் அறிந்திருப்போம். அதே போல் கொஞ்சம் வித்தியாசமாக ஒரு சம்பவம் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

பீகாரின் சுபால் பஜாரின் ஷேக்புரா பகுதியில் குர்ஷித் ஆலம் என்பவரது இரண்டு மனைவிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி போகி ஆலமின் முதல் மனைவி பர்வீன், கணவன், அவரது இரண்டாவது மனைவி உள்பட 4 பேர் மீது பெட்ரோல் ஊற்றியதோடு, அவர்கள் வசித்த வந்த வீட்டிற்கும் தீ வைத்துவிட்டு.. தானும் தற்கொலை செய்து கொண்டார்.

வீடு பற்றி எரிவதை கண்ட அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்குள் வராததால், ஆலமின் முதல் மனைவி பர்வீன் மற்றும் அவரது மாமியார் உயிருடன் எரிந்தனர். இதில் குர்ஷித் ஆலம் மற்றும் இரண்டாவது மனைவி ரோஷினி பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இது குறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில், ஷேக்புரா மொஹல்லாவில்வசிக்கும் குர்ஷித் ஆலம், அதே கிராமத்தைச் சேர்ந்த பர்வீன் என்பவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால், குர்ஷித் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ரோஷ்னி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பர்வீன் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

கடந்த காலங்களில் இவ்விவகாரம் இருவருக்குமிடையே பலமுறை விவாதம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதியாக பர்வீன் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.