ஆயுள் தண்டனை விதித்த நீதிபதியை நோக்கி செருப்பை வீசிய வாலிபர்...

நீதிபதி வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாத குற்றவாளி தனது காலணியை கழட்டியபடி நீதிபதியை நோக்கி வீசியுள்ளார்.
ஆயுள் தண்டனை விதித்த நீதிபதியை நோக்கி செருப்பை வீசிய வாலிபர்...
Published on
Updated on
1 min read

குஜராத் மாநிலத்தின் தொழிலாளியான ஒருவரின் 5 மகள் கடந்த ஏப்ரல் மாதம் அன்று பாலியல் தொல்லைக்கு தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து விசாரணை செய்த போலீசார் மத்தியபிரதேசத்தை சேர்ந்த சுஜித் சாகேட் என்ற 27 வயதான வாலிபரை இந்த வழக்கு சம்மந்தமாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மேலும் இது குறித்து தொடரப்பட்ட தீவிர விசாரணையின் போது அந்த வாலிபரானவர் சிறுமியிடம் சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி அழைத்து சென்றதாக தெரியவந்தது.மேலும் அவர் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தி அச்சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்ததும் விசாரணையில் வெளிவந்தது.

சிறுமியை கொலை செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் அவர் மீது பாய்ந்துள்ளன.மேலும் இந்த வழக்கை விசாரித்த சூரத்தின் போக்சோ சிறப்பு நீதிபதியான பி.எஸ்.காலா என்பவர் குற்றவாளியான சுஜித் சகேட் தனது மீதமுள்ள ஆயுட்காலம் முழுவதையும் சிறையிலேயே கழிக்க வேண்டும் என உத்தரவிட்டு தீர்ப்பை வழங்கியுள்ளார்.

நீதிபதி தீர்ப்பை அளித்து உத்தரவிட்ட பின் இதனை ஏற்க்க முடியாத குற்றவாளி தனது கால்களில் அணிந்திருந்த காலணியினை கழட்டி அவரை நோக்கி ஆத்திரத்தில் வீசியுள்ளார்.அவர் நீதிபதியை நோக்கியவாறு விசப்பட்ட காலணியானது அருகில் இருந்த சாட்சிக்கூண்டில் விழுந்ததாக சொல்லப்படுகிறது.

இச்சம்பவம் நீதிமன்றத்தில் இருந்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது தொடர்ந்து குற்றவாளியை அருகில் இருந்தோர் மடக்கி பிடித்த நிலையில் தற்போது அந்த வாலிபர் சிறையில் அடைப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com