பகையால் சராமாரியாக தாக்கப்பட்ட இளைஞர்.... ஆபத்தான நிலையில் சிகிச்சை!!

பகையால் சராமாரியாக தாக்கப்பட்ட இளைஞர்.... ஆபத்தான நிலையில் சிகிச்சை!!

ஆறு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பகையின் காரணமாக இளைஞர் ஒருவரை தலையில் சரமாரியாக வெட்டிய சம்பவம் சைதாப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னையை அடுத்துள்ள அம்பத்தூர் அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 21 வயதாகும் ராகுல்.  கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திய ராகுல் போதை பழக்கத்திற்கு அடிமையாகி அயப்பாக்கம் பகுதியில் சிறு சிறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் மது போதைக்கு அடிமையாகிய ராகுலை அவனது பெற்றோர் சில நாட்களுக்கு சைதாப்பேட்டையில் உள்ள அவரது சித்தப்பா வீட்டில் தங்க வைக்க முடிவு செய்துள்ளனர்.  அதன் பின்னர் கடந்த இரு தினங்களாக சைதாப்பேட்டை கோத்தமேடு குடிசை மாற்று குடியிருப்பு பகுதியில் தனது சித்தப்பா வீட்டில் வசித்து வந்த ராகுலை நேற்று இரவு பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை அவரது வீட்டு முகப்பிலேயே சரமாரியாக வெட்டி உள்ளனர். 

இந்த சம்பவத்தில்  பலத்த காயம் அடைந்து ராகுலை ரத்தம் சொட்ட சொட்ட அருகாமையில் இருந்த மக்கள் மயங்கிய நிலையில் இருந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த சைதாப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் முதற்கட்ட விசாரணையில் 6 மாதங்களுக்கு முன்பு தனது சித்தப்பா வீட்டிற்கு வந்த ராகுலுக்கும் அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும், அந்த மோதலுக்கு பழி தீர்க்கும் விதமாக நேற்று இரவு ராகுலை  வெட்டி விட்டு தப்பி சென்றிருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.  மேலும் தப்பி ஓடிய அந்த மர்மநபர்களை சைதாப்பேட்டை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க:   சென்னை அண்ணாநகரில் ஒரு கோடி ரூபாய் கொள்ளை...!!